உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காதலியின் மண்டையை உடைத்த காதலன்

காதலியின் மண்டையை உடைத்த காதலன்

மறைமலை நகர்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ், 27. சிங்கபெருமாள் கோவிலில் தங்கி, உணவகத்தில் சர்வராக வேலை பார்த்து வந்தார்.இவர், சிங்கபெருமாள் கோவிலில் தங்கி, மறைமலை நகரில் வேலை பார்த்து வந்த அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில், தினேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது, கடந்த சில நாட்களுக்கு முன் இளம் பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது.இது குறித்து நேற்று முன்தினம் இரவு, சிங்க பெருமாள் கோவிலில் வைத்து தினேஷிடம் கேட்ட போது, சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ், கீழே கிடந்த கல்லை எடுத்து, இளம் பெண் தலையில் அடித்து விட்டு தப்பிச் சென்றார்.அங்கிருந்தோர் அப்பெண்ணை மீட்டு, திருத்தேரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் தினேஷை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி