இறைச்சி கடையை அகற்ற வேண்டும்
தி ருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமம், பேருந்து நிறுத்தம் அருகே நான்கு இறைச்சி கடைகள் உள்ளன. இவை, குடியிருப்பு பகுதி மற்றும் நீர்நிலைக்கு மத்தியில் அமைந்துள்ளன. இறைச்சி கடையிலிருந்து வெளியேறும் எலும்பு துண்டுகளை, நாய்கள் கவ்விக்கொண்டு வந்து வீட்டு வாசலில் வீசுகின்றன. மேலும், இறைச்சி கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். - என்.குமரவேல், சிறுதாவூர் கிராமம்.