மேலும் செய்திகள்
மறைமலை நகர் அருகே தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
23-May-2025
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி, 31; 'பொக்லைன்' இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகின்றார்.இவரிடம், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சோனு சவுக்கான், 30, என்பவர், கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு பூபதி, பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலையிலுள்ள தன் அலுவலகம் அருகில் நின்றுள்ளார்.அப்போது அங்கு வந்த சோனு சவுக்கான், பூபதியின் கண்ணில் மண்ணை துாவி, அவர் கழுத்தில் இருந்த 1.5 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.இதுகுறித்து பூபதி, மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, சோனு சவுக்கானை போலீசார் தேடி வருகின்றனர்.
23-May-2025