உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கடை கட்டடம் பாழ் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

ரேஷன் கடை கட்டடம் பாழ் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுக்காடு ஊராட்சி உள்ளது. இதில், ரெட்டியார் தெரு பகுதியில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், நியாய விலை கடை கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.சில ஆண்டுகளாக, கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் நனைந்து வீணாகி வந்தன.இதனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், நுாலக கட்டடத்தில் தற்காலிகமாக நியாய விலை கடை மாற்றப்பட்டு, அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.நுாலக கட்டடம் உள்ள பகுதியில், தாழ்வாக மின் கம்பிகள் செல்வதால், லாரியில் ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல முடியாத சூழல் உள்ளது.எனவே, பழைய நியாய விலைக் கடையை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக நியாய விலைக் கடை கட்டடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி குடும்ப அட்டைதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி