உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தண்ணீர்பந்தல் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

தண்ணீர்பந்தல் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

செய்யூர்:மண் சாலையாக மாறியுள்ள தண்ணீர்பந்தல் - கடப்பாக்கம் சாலையை, தார்ச்சாலையாக அமைக்க வேண்டுமென, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.செய்யூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தில் இருந்து விளம்பூர் வழியாக கடப்பாக்கத்திற்குச் செல்லும், 3.8 கி.மீ., துார சாலை உள்ளது.சித்தாற்காடு, பாளையூர், தண்ணீர்பந்தல், அமந்தங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடப்பாக்கத்திற்கு சென்றுவர, இச்சாலையை பயன்படுத்தி வந்தனர்.பல ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து, சாலை சிதிலமடைந்து உள்ளதால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.மேலும், இருசக்கர வாகனங்களின் டயர்கள் 'பஞ்சர்' ஆவதால், அப்பகுதி மக்கள் 10 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு, செய்யூர் அல்லது வெடால் வழியாக கடப்பாக்கத்திற்கு சென்று வருகின்றனர்.மண் சாலையாக மாறியுள்ள இந்த சாலையை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தண்ணீர்பந்தல் - கடப்பாக்கம் இடையே சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ