உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கல்யாணம்

இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கல்யாணம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை பிரமோற்சவ திருக்கல்யாண உற்சவம் நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாவது நாள் திருக்கல்யாண உற்சவம், நேற்று முன்தினம் நடந்தது. காலை 6:00 மணிக்கு மங்கல இசையுடன் விழா துவங்கியது. மாலை 3:00 மணிக்கு விநாயகர், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், அம்பாள், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடந்தது.தொடர்ந்து, கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் உத்சவ மூர்த்திகளான பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளினர். ஆட்சீஸ்வரருக்கும் இளங்கிளி அம்மனுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண உத்சவம் நடந்தது.பஞ்சமூர்த்திகளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று, முக்கிய நிகழ்வாக திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ