உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தண்டுமாரி அம்மன் கோவில் தீமிதி விழா விமரிசை

தண்டுமாரி அம்மன் கோவில் தீமிதி விழா விமரிசை

திருப்போரூர்:சிறுதாவூர் கிராமத்தில் அமைந்துள்ள தண்டுமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா, விமரிசையாக நடந்தது. திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் அமைந்துள்ள தண்டுமாரியம்மன் மற்றும் பாலட்டம்மன் கோவில் தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் இரவு விமரிசையாக நடந்தது. முன்னதாக, விழா கடந்த 1ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, சக்தி கரக வீதி உலா, கூழ்வார்த்தல் விழா நடந்தது. நான்காம் நாளான நேற்று முன்தினம் இரவு, தீமிதி திருவிழா நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, தீ குண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை