உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கண்காணிப்பு கேமரா இல்லாததால் வனப்பகுதியில் தொடரும் திருட்டு

கண்காணிப்பு கேமரா இல்லாததால் வனப்பகுதியில் தொடரும் திருட்டு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - திப்போரூர் இடையே திருட்டுச்சம்பவத்தை தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு - திருப்போரூர் வரை வல்லம், புலிகுடிவனம், கொட்டமேடு, செம்பாக்கம், மடையத்துார், இள்ளலுார் உள்ளிட்ட 22 கி.மீ., சாலையில், 7 கி.மீ., தவிர மற்ற பகுதிகள், வனத்துறை பகுதிகளாக உள்ளன. இப்பகுதியில் தனியாக செல்லும் பெண்களை வழிமறித்து, மர்ம நபர்கள் நகைகளை பறித்துச்செல்கின்றனர். தனியாக செல்வோரிடம் வழிப்பறி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இரவு நேரங்களில், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோரை வழிமறித்து, பணம் நகைகளை, மர்ம கும்பல் பறித்துசெல்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள், திருப்போரூர், காயார் ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளிக்கின்றனர். இந்த புகார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால், கொள்ளையரை பிடிப்பது, போலீசாருக்கு பெரும்சாவலாக உள்ளது.திருட்டுச்சம்வங்களை தடுக்க, வனப்பகுதி அருகாமையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அப்போதுதான், கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியும் என்று கருதப்படுகிறது. இதனால், வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, கலெக்டரிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ