மேலும் செய்திகள்
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கூட்டம்
14-Oct-2025
ஆலோசனை கூட்டம்
30-Sep-2025
திருப்போரூர்: கந்தசுவாமி கோவில் கந்த சஷ்டி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம், திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் 22ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்குகிறது. பிரதான விழாவான சூரசம்ஹார விழா, வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்நிலையில், திருப்போரூர் தாசில்தார் சரவணன் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கோவில் செயல் அலுவலர் குமரவேல், தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் துரைராஜ், பேரூராட்சி, மின்சாரத்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அளிப்பது குறித்தும், விழாவை அனைத்து துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தி முடிக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
14-Oct-2025
30-Sep-2025