உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரில் திருப்படி திருவிழா

திருப்போரூரில் திருப்படி திருவிழா

திருப்போரூர்:திருப்போரூரில் சித்திரை பிறப்பு திருப்படி திருவிழா இன்று நடக்கிறது.திருப்போரூரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் தேதி திருப்படி திருவிழா நடத்தப்படுகிறது.இந்தாண்டு விழா முன்னிட்டு இன்று காலை 8:00 மணியிலிருந்து பல்வேறு தரப்பினர் பால்குடங்களுடன் ஊர்வலம் வந்து, கந்தனுக்கு அபிஷேகம் செய்வர்.திருப்போரூர் கந்தசுாவமி கோவில் மாடவீதிகளில் உள்ள சத்திரங்களில் நாள் முழுதும் அன்னதாம் , இரவு விடிய விடிய இன்னிசை கச்சேரி நடைபெறும். இரவு 12:00 மணிக்கு கைலாசநாதர் கோவில் பஜனைப்பாடல்களுடன் படி பூஜை சிறப்பாக நடைபெறும். மறுநாள் காலை 5:00 மணிக்க மூலவர் கந்தபெருமான் விசுதரிசனமாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏற்பாடுகளை திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ