உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கான்கிரீட் சாலை கடும் சேதம் திருவடிசூலம் கிராமத்தினர் அவதி

கான்கிரீட் சாலை கடும் சேதம் திருவடிசூலம் கிராமத்தினர் அவதி

மறைமலை நகர்: திருவடிசூலம் கிராமத்தில், சேதமடைந்துள்ள கான்கிரீட் சாலையை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திருவடிசூலம் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பழமையான ஞானபுரீஸ்வரர் சமேத கோவர்தனாம்பிகை கோவில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பிரதான கான்கிரீட் சாலை, கடுமையாக சேதமடைந்து உள்ளது. இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: திருவடிசூலம் செல்லும் பிரதான சாலையில், 200 மீ., துாரம் கான்கிரீட் சாலை சேதமடைந்து, ஜல்லிகற்கள் சிதறி கிடக்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பைரவர், கருமாரியம்மன், சிவன் கோவில்களுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி