மேலும் செய்திகள்
செங்கல்பட்டில் கஞ்சா விற்ற மூவர் கைது
22-Jan-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, வில்லியம்பாக்கம் சுடுகாடு பகுதியில் மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது, போலீசாரை கண்டு மாருதி சுசூகி காரில் தப்ப முயன்ற மூன்று நபர்களை மடக்கி பிடித்து, காரை சோதனை செய்த போது அதில், 3 கிலோ கஞ்சா இருந்தது.மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், மூவரும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த அஜய் என்ற சிவப்பிரகாசம்,26, தினேஷ்குமார் என்ற மண்ட தினேஷ்,24, அஷ்யகுமார்,21, என தெரிந்தது.சென்னையில் இருந்து கஞ்சா கடத்தி வந்து செங்கல்பட்டு பகுதியிலுள்ள கிராமங்களில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. மூவரையும் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
22-Jan-2025