மேலும் செய்திகள்
டிராக்டர் மோதி தொழிலாளி பலி
27-Jan-2025
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பெருவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 44.நேற்று தன் 'ஹீரோ ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், சித்தாமூர் நோக்கி வந்தார்.நல்லாமூர் அருகே வந்த போது, பின்புறமாக வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், எதிர் திசையில் பவுத்தங்கரணை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், 28, என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், ஸ்ரீதர் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
27-Jan-2025