உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரில் முகூர்த்த நாள் போக்குவரத்து நெரிசல்

திருப்போரூரில் முகூர்த்த நாள் போக்குவரத்து நெரிசல்

திருப்போரூர்:திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தங்களின் இல்ல திருமணங்களை நடத்த திட்டமிடுகின்றனர்.முகூர்த்த நாளான நேற்று, கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 50க்குகோவம் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. அதுமட்டுமின்றி திருப்போரூரில் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளிலும், 10க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த திருமண மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தன.இதன் காரணமாக திருப்போரூரில் கோவில் அருகே உள்ள ஓ.எம்.ஆர்., சாலை, நெம்மேலி சாலை, மாடவீதிகளில் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ