சுகாதார ஊக்குனர்களுக்கு அச்சிறுபாக்கத்தில் பயிற்சி
அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று, கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 59 ஊராட்சிகளில் பணியாற்றும் கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு, துாய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளை உடனடியாக கட்டி முடிக்க, அறிவுரை வழங்கப்பட்டது.பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், கலைஞர் கனவு இல்லம், தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தில், 1,477 பயனாளிகளுக்கு கழிப்பறை வழங்கப்பட்டது.இந்த கழிப்பறை கட்டுவதற்கான பணி உத்தரவு பெற்ற நபர்கள், கழிப்பறைகளை கட்டி முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.இதில், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் 59 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம சுகாதார ஊக்குனர்கள் பங்கேற்றனர்.