இயற்கை விவசாயம் மாணவர்களுக்கு பயிற்சி
சூணாம்பேடு, இல்லீடு தேசிய வேளாண் நிறுவனத்தில் பள்ளி மாணவர்களுக்கு, இயற்கை விவசாயம், இயற்கை உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சித்தாமூர் வட்டாரத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக, கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, இல்லீடு கிராமத்திலுள்ள தேசிய வேளாண் நிறுவனத்தில், கண்டுணர் சுற்றுலா மற்றும் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இயற்கை விவசாயம் செய்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இடு பொருட்கள் தயாரிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து, தனியார் வேளாண் கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதில் பங்கேற்ற மாணவர்கள், 50 பேருக்கு, விதை மற்றும் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.