உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி

சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. இது, ஆறுவழி மாநில நெடுஞ்சாலையாக கடந்த 2014ல் அகலப்படுத்தப்பட்டது. இந்த சாலையில் தினமும் 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் மழைநீர் தேங்காமல் வெளியேற தடங்கள் அமைக்கப்பட்டன. இந்த வழிகள் பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகின்றன. சமீபத்தில் சிங்கபெருமாள் கோவில், கொளத்துார், ஆப்பூர் திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மழைநீர் சாலையிலேயே தேங்கி, அதில் குப்பை பரவியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறினர். வாகனங்கள் வேகமாக செல்லும் போது சக வாகன ஓட்டிகள் மீது சகதி பட்டு சிரமப்படுகின்றனர். சாலையில் கிடக்கும் குப்பை மணல் திட்டுக்களை அகற்றி, மழைநீர் செல்ல வழி செய்ய வேண்டும். - மதியழகன், சிங்கபெருமாள் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை