உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கும் கழிவுநீரால் அவதி

ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கும் கழிவுநீரால் அவதி

மறைமலை நகர்சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்குவதால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை மார்க்கத்தில், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை திருக்கச்சூர், கொண்டமங்கலம், கொளத்துார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்குச் செல்வோர் பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் அதிக அளவில், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையம் செல்லும் சாலையின் நடுவே கழிவுநீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் பயணியர் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இந்த பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே, இங்கு தேங்கும் கழிவுநீரை அகற்றி, மீண்டும் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !