உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கலங்கலாக வரும் குடிநீரால் தவிப்பு

கலங்கலாக வரும் குடிநீரால் தவிப்பு

செம்மஞ்சேரி: செம்மஞ்சேரியில், மண் கலந்து கலங்கலாக குடிநீர் வருவதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜெவகர் நகர், எழில்முக நகரில், 11 தெருக்களில் 300 வீடுகள் உள்ளன. தெருக்களில், தலா 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 21 தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், 4, 5 நாட்களுக்கு ஒரு முறை லாரி குடிநீர் நிரப்பப்படும். தெருக்குழாயிலும் போதிய குடிநீர் வரவில்லை. பத்து நாட்களாக, தொட்டியில் உள்ள குடிநீர், மண் கலந்து கலங்கலாக வருவதால், சமைக்கவும், குடிக்கவும் முடியவில்லை என, அப்பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர். குடிநீர் வாரிய அதிகாரிகள் தலையிட்டு, சுகாதாரமான குடிநீர் வினியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை