உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரி நிலத்தை மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சி

ஏரி நிலத்தை மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சி

படப்பை. குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில், ஆதனஞ்சேரி ஏரிஅமைந்துள்ளது.இந்த ஏரியின் ஒன்பது ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 16 கடைகள்,ஒரு உணவகம் அமைக்கப் பட்டிருந்தது. இதை வருவாய் துறையினர் கடந்த 2015ம் ஆண்டு அதிரடியாக அகற்றினர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் அம்மன் சிலைவைத்தும், சிறு சிறு கடைகள் அமைத்தும், லாரி, வேன்களை நிறுத்தி மீண்டும் ஆக்கிரமிப்பு முயற்சி நடந்து வருகிறது.நெடுஞ்சாலையோரம் உள்ள இந்த இடத்தை மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடப்பதை தடுக்க காலியாக உள்ள இடத்தில் படப்பை பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !