உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கல்லுாரி மாணவர்களை தாக்கிய இருவர் கைது

 கல்லுாரி மாணவர்களை தாக்கிய இருவர் கைது

திருப்போரூர்: திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன். 22. கேளம்பாக்கத்தை அடுத்த படூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பார்வேந்தன், 21. இவர்கள் இருவரும், படூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், 'ஆர்கிடெக்' பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, ஒ.எம்.ஆர்., சாலை படூரில் உள்ள டீக்கடை ஒன்றில், டீ குடித்தனர். அப்போது அங்கு வந்த இரு வாலிபர்கள், மேற்கண்ட மாணவர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதில், மாணவர்களுக்கு முகம் மற்றும் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பின், இதுதொடர்பாக கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட படூர் பகுதியைச் தினேஷ், 23, சபரி பிரியன், 19, ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை