உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வீட்டின் பூட்டுடைத்து திருடிய இருவர் கைது

 வீட்டின் பூட்டுடைத்து திருடிய இருவர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த வெள்ளானுார், நேரு நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 39; கொத்தனார். இவரது மனைவி ரேவதி, 35. கடந்த நவ., 28ம் தேதி ரேவதி, அம்பத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று, மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நான்கு கிராம் தங்க நகைகள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், திருட்டில் ஈடுபட்ட பொத்துார், பவானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஷ்ணு, 20, அம்பத்துார், புதுாரைச் சேர்ந்த பெருமாள், 19 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ