உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டிப்பரில் மோதிய ஸ்கூட்டர் கூவத்துாரில் இருவர் பலி

டிப்பரில் மோதிய ஸ்கூட்டர் கூவத்துாரில் இருவர் பலி

கூவத்துார்:கூவத்துார் அடுத்த மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 50. இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், சொந்த பணி நிமித்தமாக தன் 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்.,' ஸ்கூட்டரில், பரமேஸ்வரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், 32, என்பவருடன் கல்பாக்கம் சென்றார்.பணி முடிந்து வீட்டிற்கு வந்த போது, வேப்பஞ்சேரி சாலை சந்திப்பில் திரும்பினர். அப்போது, கூவத்துாரில் இருந்து கல்பாக்கம் நோக்கிச் சென்ற டிப்பர் லாரியின் மீது, இவர்களது ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது.இதில் சேகர், ராமச்சந்திரன் பலத்த காயமடைந்தனர். லாரி டிரைவர், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பினார்.தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த கூவத்துார் போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சேகர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.நேற்று காலை, ராமச்சந்திரனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பிரேத பரிசோதனை முடிந்து, இவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.இதுகுறித்து, கூவத்துார் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை