வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பன்ளிகள் பல பிறப்பை வைத்தும் பிழைப்பு நடத்துகின்றன
மேலும் செய்திகள்
மகள் கடத்தல் தந்தை புகார்
21-Jun-2025
அச்சிறுப்பாக்கம்:வாலிபர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, வி.சி., கட்சியினர், நேற்று, போராட்டம் நடத்தினர்.அச்சிறுப்பாக்கம் அடுத்த, ஒரத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன், 27. என்பவருக்கு, விவசாய நிலம் உள்ளது. இந்நிலத்தில், முருங்கை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யப்பன், 23, கார்த்திக், 22, தமிழ்ச்செல்வன் மற்றும் வடமணிபாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன், 22 ஆகியோர், மதுபானம் அருந்தி, மதுபான பாட்டில்களை ஆங்கேயே போட்டு உடைத்து சென்றனர்.இதையறிந்த சங்கரநாராயணன் மதுபானம் அருந்தியவர்களிடம், விவசாய நிலத்தில், மதுபானம் குடிக்காகக் கூடாது என, கடந்த 15ம் தேதி, கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த அய்யப்பன் தரப்பினர், சங்கர ராயணன் மற்றும் அவரது உறவினர்களை தாக்கினர். தொடர்ந்து சங்கரநாராயணன் தரப்பினர், அய்யப்பனை தாக்கினர்.இதில், படுகாயமடைந்த சங்கர நாராயணன், சென்னையில் தனியார் மருத்துவமனையிலும், அய்யப்பன் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரை அடுத்து, ஒரத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அய்யப்பன் தரப்பை சேர்ந்த ஜானகிராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதைத்தொடர்ந்து, அய்யப்பன் மற்றும் சிலரை தாக்கியவர்கள் மீது, வன்கொடுமை வழக்கு பதிவு செய்யக்கோரி, வி.சி., கட்சியைச் சேர்ந்தவர்கள் நேற்று ஒரத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மதுராந்தகம் டி.எஸ்.பி., மேகலா, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு நடத்தி, விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின் அவர்கள், கலைந்து சென்றனர்.
பன்ளிகள் பல பிறப்பை வைத்தும் பிழைப்பு நடத்துகின்றன
21-Jun-2025