உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிங் மேக்கர்ஸ் அகாடமியுடன் வேல்ஸ் பல்கலை ஒப்பந்தம்

கிங் மேக்கர்ஸ் அகாடமியுடன் வேல்ஸ் பல்கலை ஒப்பந்தம்

சென்னை: சென்னை வேல்ஸ் பல்கலை மாணவ - மாணவியருக்கு ஆளுமைத்திறன், போட்டித்தேர்வுகளுக்கு தயாராவது உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கும் வகையில், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை வேல்ஸ் பல்கலை மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி., - யு.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில், அடிப்படை பாடத்திட்டங்கள், வழிகாட்டுதல், தலைமைப் பண்புகளை வளர்த்தல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கும் வகையில், வேல்ஸ் பல்கலையுடன், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், வேல்ஸ் பல்கலை துணைத்தலைவர் ப்ரீதா கணேசன், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ