உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முகையூர் தாமரை குளத்தை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

முகையூர் தாமரை குளத்தை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

கூவத்துார்:கூவத்துார் அடுத்த முகையூர் ஊராட்சிக்கு உட்பட்ட நடுத்திட்டு பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையோரம், தாமரை குளம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன், விவசாயத்திற்கு இக்குளம் பயன்படுத்தப்பட்டது.அதன் பின் முறையான பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து, தற்போது துார்ந்து போய் உள்ளது.மழைக்காலத்தில் குளம் நிரம்பினாலும், அடுத்த சில நாட்களில் தண்ணீர் வற்றிப்போகும் நிலையில் உள்ளது.குளத்தை சீரமைக்க வேண்டும் என, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், குளத்தை உடனடியாக துார்வாரி, சுற்றிலும் தடுப்புகள் அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ