உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வடிகால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தல்

வடிகால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தல்

செய்யூர் இடைக்கழிநாடு பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்குவதை தடுக்க மழைநீர் வடிகால்வாய்களை கண்டறிந்து துார்வாரி சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி நடந்து வரும் நிலையில், பல இடங்களில் குடியிருப்புப் பகுதியை விட அதிக உயரத்தில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓதியூர், பனையூர்,வேம்பனுார், நயினார் குப்பம், முதலியார்குப்பம் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர். பேரூராட்சி அதிகாரிகள் பருவமழை துவங்கும் முன் மழைநீர் வடிகால்வாய் மற்றும் நீர் வழித்தடங்களை கண்டறிந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை