உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கால்நடை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வலியுறுத்தல்

கால்நடை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வலியுறுத்தல்

அச்சிறுப்பாக்கம், ஊராட்சி நிர்வாகம் முறையாக சுத்தம் செய்யாததால், கடம்பூர் பகுதி கால்நடை குடிநீர் தொட்டியில் பாசி படர்ந்துள்ளது. தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கடம்பூரில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், 2019 -- 20ல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் சார்பில், கால்நடை தொட்டிக்கு குழாய் இணைப்பு வழங்கி தண்ணீர் நிரப்பப்பட்டது. மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகள் கால்நடை தொட்டியில் தேக்கி வைக்கப்படும் குடிநீரை பருகி தாகம் தீர்த்து வந்தன. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் நீண்டகாலமாக சுத்தம் செய்யாததால், இந்த தொட்டியில் பாசி படர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, கால்நடைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டியை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை