பழுதான மின் விளக்குகள் சீரமைக்க வலியுறுத்தல்
திருப்போரூர்: பிரதான சாலைகளில் பழுதாகி உள்ள உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். திருப்போரூர் அடுத்த மேலையூர் ஊராட்சியில் மேலையூர், கொண்டங்கி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. மேலையூர் பேருந்து நிறுத்தம், சிவன் கோவில், கொண்டங்கி பிரதான சாலைகளில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், மேற்கண்ட உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து நான்கு ஆண்டுகளாக எரியாமல், இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்துள்ளது. உயர்கோபுர மின் விளக்கு பழுது குறித்து ஊராட்சி நிர்வாகத்தில் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.