உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முருகநாதீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழா துவக்கம்

முருகநாதீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழா துவக்கம்

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில், தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவ பெருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 29ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து 30ம் தேதி, கிராம தேவதைகள் வழிபாடும், நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் வழிபாடும் நடந்தது.நேற்று காலை, 9:00 மணியளவில் வைகாசி விசாக பிரம்மோத்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவை முன்னிட்டு, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், சுவாமி வீதி உலா நடக்கிறது. இதில் முக்கிய விழாவாக, வரும் 9ம் தேதி, ரதம் உற்சவம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை, அறங்காவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை