உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முருகநாதீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக கொடியேற்றம்

முருகநாதீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக கொடியேற்றம்

திருப்போரூர்:மாம்பாக்கம் தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோத்சவ பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் வண்டலுார் வட்டம் மாம்பாக்கம் கிராமத்தில், தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. கிட்டத்தட்ட 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், முதலாம் ராஜராஜசோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவ பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், சுவாமி வீதி உலா நடக்கிறது.இதில், முக்கிய விழாவாக வரும் 9ம் தேதி ரதம் உத்சவம் நடைபெறுகிறது; 10ம் தேதி விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை, அறங்காவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ