பக் கோப்பை விளையாட்டு வைஷ்ணவா கல்லுாரி அசத்தல்
சென்னை, 'பக்' கோப்பை விளையாட்டு போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லுாரி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி சார்பில், கல்லுாரியின் நிறுவனர் பக் நினைவு கோப்பைக்கான விளையாட்டு திருவிழா என்ற பெயரில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், பள்ளி, கல்லுாரி பிரிவில், இருபாலருக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மகளிர் கல்லுாரிக்கான கூடைப்பந்து போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி அணி, 43 - 12 என்ற புள்ளிக்கணக்கில், ஸ்ரீராமச் சந்திரா கல்லுாரியை தோற்கடித்து, முதலிடத்தை பிடித்து அசத்தியது. அதேபோல், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி அணி, டேக்வாண்டோ, வில் வித்தை, குத்துச்சண்டை ஆகிய போட்டிகளிலும் முதலிடங்களை பிடித்தது. பேட்மின்டன், கிரிக்கெட், டென்னிஸ், பூப்பந்தாட்டம் ஆகியவற்றில் இரண்டாமிடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணியினரை, கல்லுாரி முதல்வர் அர்ச்சனா பிரசாத் பாராட்டினார்.