மேலும் செய்திகள்
அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
22-Dec-2024
மறைமலைநகர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''இப்போதெல்லாம் அம்பேத்கர்... அம்பேத்கர்... என பேசுவது 'பேஷன்' ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்தால் புண்ணியமாவது கிடைக்கும்,'' என, ராஜ்ய சபாவில் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.இதை கண்டித்து வி.சி., சார்பில் நேற்று, செங்கல்பட்டு அடுத்த பரனுார் சுங்கச்சாவடி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.செங்கல்பட்டு சட்டசபை தொகுதி துணை அமைப்பாளர் குமரேசன் தலைமையில், கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பா.ஜ., மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
22-Dec-2024