உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெடால் கோவில் குளம் மாசடைந்து சுகாதார சீர்கேடு

வெடால் கோவில் குளம் மாசடைந்து சுகாதார சீர்கேடு

செய்யூர்:செய்யூர் அருகே வெடால் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடப்பாக்கம் செல்லும் சாலையோரம், முத்துமாரியம்மன் கோவில் எதிரே குளம் உள்ளது.பல ஆண்டுகளாக குளம் பராமரிப்பு இல்லாததால், குளக்கரையில் குப்பை கொட்டி, குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலப்பதாக கூறப்படுகிறது.சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, குளத்தில் நீர் தேங்கி, மாசடைந்து துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் நிலையில் உள்ளது. மேலும், கொசுத் தொல்லை அதிகரிப்பதாக, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வெடால் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !