விஷம் குடித்த கிராம உதவியாளர் சிகிச்சை பலனின்றி பலி
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம், நேரு நகரைச் சேர்ந்தவர் கீதா, 49. இவர், அச்சிறுபாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார்.கடந்த 17ம் தேதி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, அச்சிறுபாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வந்துள்ளார்.அப்போது, உதவியாளர் கீதா தாமதமாக பணிக்கு வந்துள்ளார்.இது குறித்து, வருவாய் கோட்டாட்சியர் ரம்யா கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.அதனால், மன உளைச்சலில் இருந்த கீதா, அலுவலகத்திலேயே விஷம் அருந்தி, மயங்கி கிடந்துள்ளார்.அங்கிருந்தோர் மீட்டு, அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.பின், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மன உளைச்சல் ஏற்படும் அளவிற்கு அவதுாறாக பேசியதால் தான் கீதா தற்கொலை செய்து கொண்டதாக, கீதாவின் உறவினர்கள் அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின்படி வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.