மதுராபுதுாரில் புதிய அங்கன்வாடி அமைக்க கிராமத்தினர் எதிர்பார்ப்பு
சித்தாமூர்:மதுராபுதுார் கிராமத்தில் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.சித்தாமூர் அடுத்த பெரியகயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுராபுதுார் கிராமத்தில், 35 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி கட்டடம் அமைக்கப்பட்டது.இது நாளடைவில் பழுதடைந்ததால் தற்போது, நியாய விலைக்கடை அருகே தனியார் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இந்த அங்கன்வாடி மையத்தில், 15 குழந்தைகள் ஆரம்ப கல்வி படித்து வருகின்றனர்.கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள் என, 20 பேர் இணை உணவு, ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.இந்த தனியார் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாமல், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய அங்கன்வாடி கட்டடத்தை அகற்றி, புதிதாக அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.