உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாக்காளர் பட்டியல் திருத்தம் செங்கையில் இன்று முகாம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் செங்கையில் இன்று முகாம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், அடுத்த ஆண்டு 2025ம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ம் தேதியை மைய நாளாகக்கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம்.அதோடு, பெயர் நீக்கம், இடமாற்றம் மற்றும் முறையீடுகள் குறித்து, கடந்த அக்., 29ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை, மனுக்கள் பெறப்படும்.ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம், இன்றும், நாளையும் நடக்கிறது.இதில், பெயர் சேர்த்தல் படிவம் 6, நீக்கல் படிவம் 7 மற்றும் இடமாற்றம், தொகுதி மாற்றம், அடையாள அட்டை நகல் படிவம் 8 ஆகிய படிவங்களைப் பெற்று, திருத்தங்களை செய்யலாம்.இந்திய தேர்தல் ஆணையத்தால், தற்போது வெளியிடப்பட்டுள்ள voter helpline எனும் செயலியை பயன்படுத்தி, படிவத்தை பதிவேற்றம் செய்திட வேண்டும்.அது மட்டுமின்றி, voters.eci.gov.inஎன்ற இணையதளத்தின் வாயிலாகவும் பதிவிடலாம். குறிப்பிட்ட தினங்களுக்களில் பெறப்படும் மனுக்கள் மீது இறுதி முடிவெடுக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலானது, வருகிற அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ