உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் எச்சரிக்கை தடுப்பு

சாலையில் எச்சரிக்கை தடுப்பு

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் பாதசாரிகள் சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.பணி நடைபெற்று வரும் பகுதி அதிக வாகனங்கள் சென்று வருவதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது. இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து பணி நடைபெறும் இடத்தில் இரும்பு தடுப்பு, எச்சரிக்கை பலகையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை