திருப்போரூர் சாலையில் எச்சரிக்கை விளக்கு
மறைமலை நகர்:-செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலை 25 கி.மீ., உடையது. இந்த சாலையை திருவடி சூலம், சென்னேரி, பெருந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் திருவடிசூலம் -- திருப்போரூர் கூட்டு சாலை வரை இருபுறமும் காப்பு காடுகள் உள்ளன.இந்த பகுதியில் சாலை வளைவில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வந்தன. மேலும் சாலையை கடக்கும் குரங்குகள் அடிக்கடி வாகனங்கள் மோதி காயமடைவது மற்றும் உயிரிழப்புகள் சம்பவங்களும் நடைபெறும் வந்தன.இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். நம் நாளிதழிலும் செய்தி வெளியானது.இதையடுத்து,தற்போது இந்த பகுதியில் சூரிய ஒளியிலான எச்சரிக்கை விளக்கு மற்றும் பலகை நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.