உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரம் மாநகராட்சி சாலைகளில் ஆக்கிரமிப்புகள் மண்டல வாரியாக அமைக்கப்பட்ட குழு என்னாச்சு?

தாம்பரம் மாநகராட்சி சாலைகளில் ஆக்கிரமிப்புகள் மண்டல வாரியாக அமைக்கப்பட்ட குழு என்னாச்சு?

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஐந்து மண்டலத்திற்கும் அமைக்கப்பட்ட குழு வேலை செய்யாததால், உட்புற சாலைகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தாம்பரம் மாநகராட்சியில், பிரதான சாலை, உட்புற சாலைகள் என, மொத்தம் 7,200 சாலைகள் உள்ளன. இதில், தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், செம்பாக்கம் பகுதிகள், நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. இப்பகுதிகளில் வணிக நிறுவனங்கள், துணிக்கடை, ஹோட்டல், நகைக் கடைகள் போட்டி போட்டு துவக்கப்படுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=io9i2hlj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுக்குமாடி குடியிருப்புகளும் பெருகி வருகின்றன. சென்னையின் நுழைவாயிலாக தாம்பரம் உள்ளதால், பல்வேறு பணிகளுக்காக, தினசரி லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில், பொதுமக்களின் நடமாட்டத்திற்கு ஏற்றாற்போல், சாலையோர ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. சண்முகம், ராஜாஜி, காந்தி, அப்துல் ரசாக், முத்துலிங்கம் முதலி, வெங்கடேசன், பல்லாவரம் - திருநீர்மலை, பம்மல் - திருநீர்மலை, சி.எல்.சி., ராதா நகர் பிரதான சாலை, ராஜேந்திர பிரசாத், தாம்பரம்- - வேளச்சேரி, தாம்பரம் - முடிச்சூர், பல்லாவரம் - குன்றத்துார், தர்கா உள்ளிட்ட சாலைகளில், சாலையோர ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன. அவ்வப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. அதனால், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை ஒழுங்குபடுத்த வசதியாக, ஐந்து மண்டலத்திற்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டது. ஆனால், அக்குழு வேலையே செய்வதில்லை. அதனால், வழக்கம் போல் உட்புற சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இவ்விஷயத்தில், மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, மண்டல வாரியாக அமைக்கப்பட்ட குழுவினர், முறையாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை