உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முள்ளிக்கொளத்துாரில் தானிய கிடங்கு செயல்பாட்டிற்கு வருவது எப்போது?

முள்ளிக்கொளத்துாரில் தானிய கிடங்கு செயல்பாட்டிற்கு வருவது எப்போது?

செங்கல்பட்டு:திருக்கழுக்குன்றம் தாலுகாவில், முள்ளிக்கொளத்துார், குண்ணவாக்கம், நெரும்பூர், எடையத்துார் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாய நிலங்களில், நெல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர் சாகுபடி செய்படுகிறது. இதனால், திருக்கழுக்குன்றம் தாலுகாவில், தானிய கிடங்கு அமைக்க வேண்டும் என, கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, திருக்கழுக்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், திருக்கழுக்குன்றம் அடுத்த, முள்ளிக்கொளத்துார் கிராமத்தில், ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட தானிய கிடங்கு கட்ட முடிவு செய்தது.தானிய கிடங்கு கட்ட நிலம் ஒதுக்கிதர, கலெக்டரிடம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பின், முள்ளிக்கொளத்துாரில் 0.50 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்து, ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, திருக்கழுக்குன்றம் தாசில்தாருக்கு அனுப்பி வைத்தனர்.இதன் மீது நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன்கருதி, தானிய கிடங்கு கட்ட நிலம் ஒதுக்கீதர, வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ