ஜமீன் எண்டத்துார் சாலை சீரமைப்பது எப்போது?
ப வுஞ்சூர் அருகே மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, ஜமீன் எண்டத்துார் கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது. ஒழவெட்டி, நெட்ரம்பாக்கம், ஜமீன் எண்டத்துார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில், மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையுடன் ஜமீன் எண்டத்துார் கிராம சாலை இணையும் சந்திப்பில், சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர், இந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, சாலை சந்திப்பில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - மா.சுரேஷ், பவுஞ்சூர்.