யார் அந்த சார்? அ.தி.மு.க., பிரசாரம்
திருப்போரூர்:அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், தி.மு.க., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில்,'யார் அந்த சார்?' என்ற,'ஸ்டிக்கர்' பிரசாரத்தை, அ.தி.மு.க., துவக்கியுள்ளது.அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை திருப்போரூர் பேருந்து நிலையத்தில், அ.தி.மு.க., செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் பாஸ்கர் தலைமையில், கட்சியினர் இருசக்கர வாகனம், கார்களில், 'யார் அந்த சார்' என்ற 'ஸ்டிக்கர்' ஒட்டி பிரசாரம் செய்தனர்.மாநிலம் முழுதும் அ.தி.மு.க.,வினர் தங்கள் வாகனங்களில், இந்த ஸ்டிக்கரை ஒட்டி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு போராடுவோம் என, தெரிவித்தனர்.