மேலும் செய்திகள்
மோட்டார் பழுதால் பயனற்ற மேல்நிலை குடிநீர் தொட்டி
10-Sep-2025
சித்தாமூர்:சின்னகயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, புதிதாக அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சித்தாமூர் அடுத்த சின்னகயப்பாக்கம் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பெரியகயப்பாக்கம் செல்லும் சாலை ஓரத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்களில் கிராம மக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, கான்கிரீட் கலவைகள் உதிர்ந்து உள்ளதால், பலத்த காற்று வீசினால் தொட்டி இடிந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக இந்த குடிநீர் தொட்டியை இடிந்து அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
10-Sep-2025