மேலும் செய்திகள்
ஊராட்சி மன்ற பழைய கட்டடம் இடிக்க கோரிக்கை
08-Mar-2025
அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கெண்டிரச்சேரி ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம், இடிந்து விழும் நிலையில் இருந்ததால், இடித்து அகற்றப்பட்டது. இதனால், தற்காலிகமாக இ- - சேவை மைய வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது.புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கட்டடம் அமைக்க கோரி ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளுக்கு, ஊராட்சி நிர்வாகத்தினர் வாயிலாக பலமுறை மனு அளிக்கப்பட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இது குறித்து ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய கட்டடம் இருந்த பகுதியிலேயே, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
08-Mar-2025