உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம் திறக்கப்படுமா?

அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம் திறக்கப்படுமா?

மதுராந்தகம்:மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகத்தை, திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, பக்தர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோவில் அருகே ஹிந்து அறநிலையத் துறை ஆய்வாளர் அலுவலகம், பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், ஆறு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் உள்ளது. ஹிந்து சமய அறநிலை யத்துறை அதிகாரிகள், கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை