உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் கம்பத்தை சுற்றியுள்ள கொடிகள் அகற்றப்படுமா?

மின் கம்பத்தை சுற்றியுள்ள கொடிகள் அகற்றப்படுமா?

மறைமலை நகர் நகராட்சி, 21வது வார்டு செங்குன்றம் செல்லும் மெல்ரோசாபுரம் -- செங்குன்றம் சாலையோரம், நகராட்சி சார்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த பகுதியில் உள்ள ஐந்து மின் கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன.இதனால், இரவு நேரங்களில் சாலையில் போதுமான வெளிச்சம் இல்லாததால், பகுதிவாசிகள் அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கம்பங்களில் உள்ள கொடிகளை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- த.தேவி, மறைமலை நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை