உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குன்னத்துார் டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

குன்னத்துார் டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

சதுரங்கப்பட்டினம்: குன்னத்துார், மணமை பகுதிகளில் இருந்து, செங்கல்பட்டிற்கு பஸ் இன்றி, பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.கல்பாக்கம் அடுத்த, குன்னத்துார், மணமை ஆகிய பகுதிகளில் இருந்து, வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு, ஏராளமானவர்கள் செல்கின்றனர்.செங்கல்பட்டில் இருந்து, குன்னத்துாருக்கு, டவுன் பஸ் நீண்டகாலம் இயக்கப்பட்டது. இந்த பஸ், சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இப்பகுதியினர் ஷேர் ஆட்டோ, இருசக்கர வாகனம் ஆகியவற்றில் சென்று அவதிப்படுகின்றனர். நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை