உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுதல் திறன் மின்மாற்றி அமைக்கும் பணி தீவிரம்

கூடுதல் திறன் மின்மாற்றி அமைக்கும் பணி தீவிரம்

வண்டலுார், நல்லம்பாக்கம் ஊராட்சியில், துணை மின் நிலையத்தில், 7 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் திறன் மின்மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.சென்னைக்கு அருகாமையில், வண்டலுார் அடுத்த, நல்லம்பாக்கம் ஊராட்சியில், குடியிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுமட்டும் இன்றி, அடுக்குமாடி குடியிப்புகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு, துணை மின் நிலையம் உள்ளன.இந்நிலையத்தில் இருந்து, வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில், மின் பயன்பாடு அதிகரித்ததால், மின் அழுத்த குறைபாடு ஏற்படுகிறது.இதனால், கிராமவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க, மின் வினியோகம் அதிகப்படுத்த வேண்டும் என, மின்வாரிய அதிகாரிகளிடம், கிராமவாசிகள் மற்றும் தொழிற்சாலையை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, துணை மின் நிலைய வளாகத்தில், 16 எம்.வி.ஏ., எனப்படும் மெகா வோல்ட் ஆம்பியர் திறனில் டிரான்ஸ்பர்மர் அமைக்க, 7 கோடி ரூபாய் நிதியை, மின்வாரியம் ஒதுக்கீடு செய்தது.அதன்பின், மெகா வோல்ட் ஆம்பியர் திறனில் டிரான்ஸ்பர்மர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்தவுடன், மின் வினியோகம் சீரான முறையில் வழங்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை