உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ -வீலர் மோதி தொழிலாளி பலி

டூ -வீலர் மோதி தொழிலாளி பலி

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன், 49. மறைமலை நகர் என்.ஹெச் -3 பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை, ஜி.எஸ்.டி., சாலையில், மறைமலை நகர் அருகில் நடந்து சென்ற போது, 'கே.டி.எம்.,' பைக் ஒன்று, மாரியப்பன் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாரியப்பன், படுகாயம் அடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து பொத்தேரி பகுதியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை